தென்காசி கலிங்கப்பட்டி வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்களித்தார்
தென்காசி சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கலிங்கப்பட்டி வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வாக்கை செலுத்தினார்.
தென்காசி,
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினர்.
அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தென்காசி சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கலிங்கப்பட்டி வாக்குச்சாவடிக்கு தனது மகனுடன் வருகை தந்தார். பின்னர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை அவர் பதிவு செய்தார்.