தமிழகம் மீது கலாச்சார தாக்குதலை பாஜக நடத்தி வருகிறது - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகம் மீது கலாச்சார தாக்குதலை பாஜக நடத்தி வருவதாக சேலம் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

Update: 2021-03-28 12:39 GMT
சேலம்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசுகையில், தமிழகம் மீது கலாச்சார தாக்குதலை பாஜக நடத்தி வருகிறது. ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல, தமிழக உரிமையை மீட்பதற்கான தேர்தல் இது. பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்