தேர்தல் ஆணைய பரிந்துரை: தமிழகம் முழுவதும் 55 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் முழு விவரம்
தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று துணை போலீஸ் சூப்பிரெண்டு உள்பட 55 போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக டிஜிபி திரிபாதி அறிவித்திருக்கிறார்.
சென்னை
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன.அதன்படி, அனைத்து அரசு அதிகாரிகள், அலுவலர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வருகின்றனர்.
அரசின் அன்றாட செயல்பாடுகளை அதிகாரிகள் கவனிக்கலாம் என்றாலும், புதிய உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடுதான் பிறப்பிக்க முடியும்.
தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலர்கள் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறும்போது பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
எனவே அவர்களின் செயல்பாடுகள் பற்றிய புகார்கள், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மூலமாக அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற புகார்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் (மாவட்ட கலெக்டர்கள்) அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் உண்மைத்தன்மையை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து கண்டறிந்து, அதுதொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி மூலமாக அனுப்பி வைக்கிறார்கள். இந்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் உத்தரவுகளை பிறப்பிக்கிறது. அதில் ஒரு நடவடிக்கையாக சென்னை, திருவண்ணாமலை , சேலம் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் உட்பட மற்ற மாவட்டங்களின் உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்யப்ட்டு உள்ளனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு 277 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து திரிபாதி உத்தரவிட்டிருந்தார். தற்போது தேர்தல் ஆணைய பரிந்துரையை ஏற்று போலீஸ் டிஎஸ்பி உள்பட 55 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி மாற்றப்பட்ட சில உதவி ஆணையர்கள் விவரம்:
திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தகுமார் மாற்றப்பட்டு, திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக உதவி ஆணையர் பொன்சங்கர், திருவொற்றியூர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேப்பேரி உதவி ஆணையர் கமலக்கண்ணன் மாற்றப்பட்டு, சேலம் தெற்கு நகர் குற்றப்பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் ரெயில்வே டிஎஸ்பி பாபு மாற்றப்பட்டு, வேப்பேரி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புளியந்தோப்பு உதவி ஆணையர் பிரகாஷ்குமார் மாற்றப்பட்டு, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறைத்துறை நுண்ணறிவு மற்றும் ஊழல் கண்காணிப்பு டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி மாற்றப்பட்டு, புளியந்தோப்பு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்றம் உதவி ஆணையர் விஜயராமுலு மாற்றப்பட்டு, கள்ளக்குறிச்சி குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிபிசிஐடி காவல் ஆய்வு பிரிவு டிஎஸ்பி சரஸ்வதி மாற்றப்பட்டு, உயர் நீதிமன்ற உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வில்லிவாக்கம் உதவி ஆணையர் அகஸ்டின் பால் சுதாகர் மாற்றப்பட்டு, சென்னை போலீஸ் அகாடமி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போலீஸ் அகாடமி டிஎஸ்பி ஸ்டீபன் மாற்றப்பட்டு, வில்லிவாக்கம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்கேபி நகர் உதவி ஆணையர் ஹரிகுமார் மாற்றப்பட்டு, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமுக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி கலைச்செல்வன் மாற்றப்பட்டு, எம்கேபி நகர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா நகர் உதவி ஆணையர் பாலமுருகன் மாற்றப்பட்டு, விழுப்புரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ராஜன் மாற்றப்பட்டு, அண்ணாநகர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலாங்கரை உதவி ஆணையர் விஸ்வேஸ்வரய்யா மாற்றப்பட்டு, சேலையூர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலையூர் உதவி ஆணையர் சகாதேவன் மாற்றப்பட்டு, நீலாங்கரை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி-2 மெட்ரோ சென்னை டிஎஸ்பி அண்ணாதுரை மாற்றப்பட்டு, நுங்கம்பாக்கம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி மாற்றப்பட்டு, வேலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
செம்பியம் உதவி ஆணையர் சுரேந்திரன் மாற்றப்பட்டு, திருச்சி குற்ற ஆவணக் காப்பக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி வீரமணி மாற்றப்பட்டு, செம்பியம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ராஜா மாற்றப்பட்டு, கள்ளக்குறிச்சி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி ராஜாமோகன் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போரூர் எஸ்.ஆர்.எம்.சி உதவி ஆணையர் அசோகன் மாற்றப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி பழனி மாற்றப்பட்டு, போரூர் எஸ்.ஆர்.எம்.சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எண்ணூர் உதவி ஆணையர் ராஜேந்திரன் மாற்றப்பட்டு, கடலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கந்தகுமார் மாற்றப்பட்டு, எண்ணூர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர் மாற்றப்பட்டு, திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பரங்கிமலை உதவி ஆணையர் சம்பத் மாற்றப்பட்டு, வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டூர்புரம் உதவி ஆணையர் செம்பேடு பாபு மாற்றப்பட்டு, பரங்கிமலை உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவலர் பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் உதவி ஆணையர் ஜீவாநந்தன் மாற்றப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அசோக் நகர் உதவி ஆணையர் ஃபிராங் டி ரூபன் மாற்றப்பட்டு, செங்கை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு டிஎஸ்பி தனபாலன் மாற்றப்பட்டு, அசோக் நகர் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடபழனி உதவி ஆணையர் ராஜசேகர் மாற்றப்பட்டு, சென்னை தகவல் தொழில் நுட்பப்பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தகவல் தொழில் நுட்பப்பிரிவு டிஎஸ்பி ஆரோக்கிய ரவீந்திரன் மாற்றப்பட்டு, வடபழனி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயனாவரம் உதவி ஆணையர் சீனிவாசன் மாற்றப்பட்டு, திருச்சி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சந்திரன் மாற்றப்பட்டு, அயனாவரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராயபுரம் உதவி ஆணையர் தினகரன் மாற்றப்பட்டு, பாலக்கோடு சப் டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலக்கோடு சப் டிவிஷன் டிஎஸ்பி சீனிவாசன் மாற்றப்பட்டு, ராயபுரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களோடு சேர்த்து 55 டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.