"விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்குவேன்" - பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தேர்தலில் வெற்றி பெற்றால் விருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டம் ஆக்குவது தான் என் முதல் வேலை என்று பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2021-03-22 05:49 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் சட்ட மன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி கட்சி சார்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் விருத்தாசலத்தில் தங்கி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விருத்தாசலம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த் நல்லூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் வெற்றி பெற்றால் விருத்தாசலம் தொகுதியை தனி மாவட்டம் ஆக்குவது தான் என் முதல் வேலை. விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாகும் போது நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். விருத்தாசலம் தொகுதிக்கு சிறப்பான வசதிகளை செய்து தருவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்