ஜெயலலிதா மரணம் குறித்து திமுக. கூறினால் அதிமுக.வினருக்கு ஏன் அச்சம்? - ஆ.ராசா

ஜெயலலிதா மரணம் குறித்து திமுக. கூறினால் அதிமுக.வினருக்கு ஏன் அச்சம் என்று திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2021-03-21 08:22 GMT
ஈரோடு,

பவானிசாகர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.எல்.சுந்தரம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா நேற்று புஞ்சைபுளியம்பட்டியில் பிரசாரம் செய்தார். 

அதன்பின்னர் ஆ.ராசா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியதால் பயந்து போய் அ.தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கிறார்கள். ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க. கூறினால் அ.தி.மு.க.வினர் ஏன் அச்சப்படுகிறார்கள்.

பூரண மதுவிலக்கு குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் முடிவெடுப்போம். இலவச கியாஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். மாதம் 1,500 ரூபாய் உதவி தொகை கொடுக்கிறோம் என்பவர்கள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் கொடுக்கவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்