என் மீது காவியும் ஒட்டாது, கருப்பும் ஒட்டாது - கமல்ஹாசன் பேச்சு

காவியோ, கருப்போ எந்த நிறமும் என் மீது ஒட்டாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Update: 2021-03-21 05:24 GMT
கோவை,

கோவை பீளமேடு ரொட்டிக்கடை மைதானத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் மண், மொழி, மக்கள் காக்க என்ற பெயரில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

மக்கள் பிரச்சினையை சட்டசபை மட்டுமின்றி ஐ.நா சபை வரை பேச வேண்டும் என்றாலும் பேசுவேன். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மட்டும் நான் மக்களின் பிரதிநிதி கிடையாது. உண்மையாகவே நான் மக்கள் பிரதிநிதி தான். மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுப்போம். இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் இங்கு எதுவும் செய்ய வில்லை.

மக்களுக்கு தேவையான திட்டங்களை பெறுவது, மக்களின் உரிமை. சினிமாவை நிறுத்திவிட்டு அரசியலுக்கு வந்து இருக்கிறேன். காவியாக இருந்தாலும், கருப்பாக இருந்தாலும் சரி எந்த நிறமும் என் மீது ஒட்டாது. என் மீது எந்த சாயமும் பூச முயற்சிக்க வேண்டாம். குற்றவாளிகளை ஒருமையில் தான் பேசுவேன். அந்த அவமானத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்