பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டி
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
சென்னை
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோப்பு வெங்கடாசலம் வெற்றி பெற்றதோடு, ஒரு முறை அமைச்சர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், வருகிற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த போது செய்த திட்டப்பணிகளை முன் வைத்து சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.