தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையம்

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-17 12:21 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.127.64 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணமும், மேற்கு வங்காளத்தில் ரூ.112.59 கோடி மதிப்புள்ள பொருட்களும், அசாமில் ரூ.63 கோடியே ரூ.75 லட்சமும், கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சமும், புதுச்சேரியில் ரூ.5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்