வீதி வீதியாக சென்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் திமுக தலைவர் முக ஸ்டாலின்

சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் வீதி வீதியாக சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2021-03-16 08:07 GMT
சேலம்,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், சேலம் மாவட்டம் சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளாராக ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் வீதி வீதியாக சென்ற முக ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும், அப்பகுதியில் இருந்த கடைகளிலும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  

மேலும் செய்திகள்