"தேர்தல் அறிக்கை தான் தேர்தலில் கதாநாயகன்" - உதயநிதி ஸ்டாலின் கருத்து
தேர்தல் அறிக்கை தான் தேர்தலில் கதாநாயகன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியாதாவது:-
சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. மேலும் அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் மற்றும் பால் விலை குறைந்திருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நான் முக்கியமான திட்டமாக கருதுவது நீட் தேர்வு ரத்து தான்.
மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டார்கள். திமுகவில் எப்போதுமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் செய்திகாட்டிய தலைவர் என்றும், இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.