தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியானது.

Update: 2021-03-12 00:14 GMT
சென்னை, 

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக், மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடும் இடங்களை இறுதி செய்வது குறித்து சென்னை அண்ணாஅறிவாலயத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டது.

காங்கிரஸ் போட்டியிடும்25 தொகுதிகள்

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் பட்டியல் அடங்கிய உடன்பாடு ஒப்பந்ததில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்திட்டனர். அப்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. பொன்னேரி (தனி).

2.ஸ்ரீபெரும்புதூர் (தனி).

3.சோளிங்கர்.

4.ஊத்தங்கரை (தனி).

5.ஓமலூர்.

6.உதகமண்டலம்.

7.கோவை தெற்கு.

8.காரைக்குடி.

9.மேலூர்.

10.சிவகாசி.

11.ஸ்ரீவைகுண்டம்.

12.குளச்சல்.

13.விளவங்கோடு.

14.கிள்ளியூர்.

15.ஈரோடு கிழக்கு.

16.தென்காசி.

17.அறந்தாங்கி.

18.விருத்தாசலம்.

19.நாங்குநேரி.

20.கள்ளக்குறிச்சி (தனி).

21.ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி).

22.திருவாடானை.

23.உடுமலைப்பேட்டை.

24.மயிலாடுதுறை.

25.வேளச்சேரி.

(2016 தேர்தலில் பொன்னேரி, ஊத்தங்கரை, மேலூர், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, திருவாடானை, உடுமலைபேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தே.மு.தி.க.வுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் களம் கண்டது.)

இந்திய கம்யூனிஸ்டு6 தொகுதிகள்

இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடும் 6 தொகுதிகள் பட்டியல் ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும், முத்தரசனும் கையெழுத்திட்டனர். அந்த கட்சி போட்டியிடும் இடங்கள் வருமாறு:-

1. பவானிசாகர் (தனி).

2.திருப்பூர் வடக்கு.

3.வால்பாறை (தனி)

4.சிவகங்கை.

5.திருத்துறைப்பூண்டி (தனி)

6.தளி.

(2016 சட்டமன்ற தேர்தலில் இந்த 5 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிட்டது. அதே போன்று மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இந்த 5 தொகுதிகளில் களம் கண்டது. இதில் திருத்துறைப்பூண்டி, தளி ஆகிய 2 தொகுதியில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது. மற்ற 3 தொகுதிகளும் அ.தி.மு.க. வசம் சென்றது).

கொ.ம.தே.க. 3 தொகுதிகள்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உடன்பாடு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும்,ஈ.ஆர்.ஈஸ்வரனும் கையெழுத்திட்டனர். அந்த கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் இடங்கள் வருமாறு:-

1. பெருந்துறை

2.திருச்செங்கோடு.

3.சூலூர்.

(2016 சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை, திருச்செங்கோடு தொகுதியில் தி.மு.க. போட்டியிட்டது. சூலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த 3 தொகுதிகளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது).

ம.ம.க. 2 தொகுதிகள்

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 இடங்களுக்கான உடன்பாடு அறிக்கையில் மு.க.ஸ்டாலினும், ஜவாஹிருல்லாவும் கையெழுத்திட்டனர். அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகள் வருமாறு:- (இரண்டில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறது)

1.பாபநாசம்.

2.மணப்பாறை.

(2016 சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பாபநாசம் தொகுதியிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மணப்பாறை தொகுதியிலும் போட்டியிட்டது. இந்த 2 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றிவாகை சூடியது).

விடுதலை சிறுத்தைகள்

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்கள் எவை? என்பது நேற்று இறுதி செய்யப்பட்டது. இதற்கான உடன்பாடு ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் இடங்கள் விவரம் வருமாறு:-

1.வானூர் (தனி).

2.காட்டுமன்னார்கோவில் (தனி).

3.செய்யூர் (தனி).

4.அரக்கோணம் (தனி).

5.நாகப்பட்டினம்.

6.திருப்போரூர்.

(2016 சட்டமன்ற தேர்தலில் வானூர், செய்யூர், அரக்கோணம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. களம் கண்டது. காட்டுமன்னார்கோவிலில் காங்கிரஸ் கட்சியும், நாகப்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் போட்டியிட்டது)

மேலும் செய்திகள்