ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு மதுராந்தகத்தில் மல்லை சத்யா போட்டி
ம.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வைகோ நேற்று வெளியிட்டார். மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யா போட்டியிடுகிறார்.
சென்னை,
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு மதுராந்தகம் (தனி), சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), அரியலூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பும் ம.தி. மு.க.வினரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நேர்காணல் நடத்தினர். அதன்பின்னர் ம.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வைகோ நேற்றிரவு வெளியிட்டார்.
மல்லை சத்யா
வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
1. மதுராந்தகம் (தனி) - மல்லை சி.ஏ.சத்யா (ம.தி.மு.க. துணை பொதுசெயலாளர்).
2. சாத்தூர்-டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் (விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்).
3. பல்லடம்-க.முத்துரத்தினம் (திருப்பூர் மாவட்ட துணை செயலாளர்).
4. மதுரை தெற்கு-மு.பூமிநாதன் (மதுரை மாவட்ட செயலாளர்).
5. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் சதன் திருமலைக்குமார் (உயர்நிலை குழு உறுப்பினர்).
6. அரியலூர்-வக்கீல் கு.சின்னப்பா (அரியலூர் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர்).
ம.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.