மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: மதுரை தெற்கில் பூமிநாதன், வாசுதேவநல்லூரில் சதன் திருமலைக்குமார் போட்டி
மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வைகோ இன்று வெளியிட்டார்.மதுரை தெற்கில் பூமிநாதன், வாசுதேவநல்லூரில் சதன் திருமலைக்குமார் போட்டி
சென்னை
சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது. இதில் சில கட்சிகளுக்கு நேற்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 இடங்கள் அடங்கிய தொகுதி பட்டியல் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், வைகோவும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், வேட்பாளர் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார். அதன் விவரம் வரும்மறு:-
1. மதுராந்தகம் ( தனி) - மல்லை சி.ஏ. சத்யா
2. சாத்தூர் - டாக்டர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்
3. பல்லடம் - க. முத்துரத்தினம்
4. மதுரை தெற்கு - மு. பூமிநாதன்
5. வாசுதேவநல்லூர் (தனி) - டாக்டர் சதன் திருமலைக்குமார்
6. அரியலூர் - வழக்கறிஞர் கு. சின்னப்பா