கமல்ஹாசன் - சரத்குமார் சந்திப்பு: தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்தார்.

Update: 2021-03-06 10:27 GMT
சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்தும், திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்தும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3-வது அணி அமைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த 3-வது அணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ள்ளன.

இந்நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளர் ரவி பாபுவும் பங்கேற்றுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்