தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ரூ.15.20 கோடி மதிப்பிலான பணம்,பரிசுப்பொருட்கள் பறிமுதல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 15 கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை:-
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வாகன சோதனை உள்பட்ட பல்வேறு வழிகளில் தேர்தல் பறக்கும்படையினர் திவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டுவரப்படும் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 15 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். நேற்றுவரை 14 கோடியே 13 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.