தொகுதி பங்கீடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக மீண்டும் அழைப்பு
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அதன்படி அதிமுகவில் பாமகவுடன் மட்டும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியுடனும் மனித நேய மக்கள் கட்சியுடனும் விசிகவுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்துள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.