மார்ச் 6-ம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்த முழுமையான தகவல் தெரியும் - வைகோ

திமுகவுடனான மார்ச் 6-ம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்த முழுமையான தகவல் தெரியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Update: 2021-03-03 15:56 GMT
கோப்புக்காட்சி
சென்னை,

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மதிமுக சார்பில் நான்கு பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் நியமித்துள்ளார்.

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அக்கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை இன்று நடத்தினார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை எழும்பூர் தாயகத்தில் மார்ச் 6ஆம் தேதி மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். மார்ச் 6ஆம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்த முழுமையான தகவல் தெரியும் என்றார்.


மேலும் செய்திகள்