சின்னசேலத்தில் மண்டல அளவிலான மகளிர் தின கருத்தரங்கு

சின்னசேலத்தில் மண்டல அளவிலான மகளிர் தின கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-03-31 18:45 GMT

சின்னசேலம், 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சார்பில் மண்டல அளவிலான மகளிர் தின கருத்தரங்கு சின்னசேலத்தில் நடைபெற்றது. இதற்கு மஞ்சு தலைமை தாங்கினார். திருப்பத்தூர் நளினி, சேலம் தனபாக்கியம், காடயாம்பட்டி சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் அமிர்தா வரவேற்றார். ஓய்வுபெற்ற சமூக நலத்துறை துணை இயக்குனர் ஜெம்மா டிசில்வா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு, பெண் கல்வி, பெண்கள் உரிமை, பெண்களுக்கான சுதந்திரம் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார். ஓமலூர் மணி, பாப்பாத்தி, கடலூர் காமாட்சி, சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ், மகளிர் அணி அருள்மொழி அம்பிகா, சவுமியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், திருப்பத்தூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சின்னசேலம் அங்கன்வாடி பணியாளர் மரியம்மாள் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்