அதிவேகமாக சென்ற யூடியூபர் கோர்ட்டில் சரண்

கோவையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்ற யூடியூபர் கோர்ட்டில் சரணடைந்தார்.

Update: 2022-09-27 18:45 GMT

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பைக்கரான யூடியூபர் டி.டி.எப்.வாசன் என்பவர் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி சென்றார். அந்த வீடியோ காட்சியையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் டி.டி.எப்.வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் போலீஸ் நிலையங்களில் தலா 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன

இந்த நிலையில் மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு பைக்கர் வாசன் காலை 10.30 மணிக்கு சரணடைந்தார்.

அவர், மாலை 5.30 வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்தார். 2 நபர்கள் உத்தரவாதம் கொடுத்த பிறகு மாலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்