மதுபானம் விற்ற வாலிபர் கைது

ஆயக்குடியில் மதுபானம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-14 19:15 GMT

பழனியை அடுத்த புதுஆயக்குடி பகுதியில் ஆயக்குடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பழனியை சேர்ந்த சரவணகுமார் (வயது 30) என்பதும், அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்றதும் தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்