வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது

ஆம்பூர் அருகே வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-08 12:30 GMT

ஆம்பூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணதாசன் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 26) என்பவர் கர்நாடக மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்