பிளஸ்-1 மாணவியை தாயாக்கிய வாலிபர், போக்சோவில் கைது

வேதாரண்யம் அருகே பிளஸ்-1 மாணவியை தாயாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-24 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே பிளஸ்-1 மாணவியை தாயாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.

குழந்தை பெற்ற மாணவி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் மாதவன்(வயது 24). இவருக்கும், பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்துள்ளர். இதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மாணவி, மாதவனிடம் கேட்டுள்ளார். அதற்கு மாதவன் மறுத்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

போக்சோவில், வாலிபர் கைது

இது குறித்து டாக்டர்கள் வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி, மங்களேஸ்வரி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்