வேறொரு பெண்ணுடன் 3-ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில்காதலியை கரம் பிடித்த வாலிபர் தற்கொலைதிண்டிவனம் அருகே பரபரப்பு

திண்டிவனம் அருகே வேறொரு பெண்ணுடன் 3-ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் காதலியை கரம் பிடித்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-18 18:45 GMT


திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் பசார் புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னன் மகன் கண்ணதாசன் (வயது 28). இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம் திருமுக்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டு, வருகிற 3-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக அழைப்பிதழ்கள் அச்சடிப்பது உள்ளிட்ட திருமண ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர்.

காதலிக்கு தாலி கட்டினார்

இந்த நிலையில், கண்ணதாசன் சென்னை நாவலூர் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த தனது காதலிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பற்றி அறிந்த, நிச்சயம் செய்யப்பட்ட பெண் வீட்டார்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, செய்யூர் தாலுகா நெற்குணம் அடுத்த புலியணி கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் மகன் ருத்ரகுமார் என்கிற உதயா( 39), திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூரை சேர்ந்த எட்டியான் மகன் ராமு என்கிற ராஜ் (32 ) ஆகியோர் கண்ணதாசனிடம் இதுபற்றி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாவு

இதனால் மனமுடைந்த கண்ணதாசன் நேற்று முன்தினம் மாலை விஷத்தை குடித்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ருத்ரகுமார், ராமு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்