பெண்ணை தாக்கிய வாலிபர் சிறையில் அடைப்பு
பெண்ணை தாக்கிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
செம்பட்டிவிடுதி நால்ரோட்டை சேர்ந்தவர் சின்னையா மனைவி கிரிஷாலீலா (வயது 47). இவர், புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் மெஸ் வைத்து நடத்தி வருகிறார். எம்.தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சரண்ராஜ் (30). இவர் கிரிஷாலீலா மெஸ்சிற்கு சென்று அவரிடம் கடன் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து கிரிஷாலீலாவை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிரிஷாலீலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், செம்பட்டிவிடுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து சரண் ராஜை கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.