மனைவியை தாக்கிய வாலிபர் கைது

திண்டிவனத்தில் மனைவியை தாக்கிய வாலிபர் கைது

Update: 2023-05-28 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அவரப்பாக்கம்பகுதியை சேர்ந்த முனியன் மகள் ராஜசுலோசனா(வயது 32). இவருக்கும் செஞ்சி அருகே உள்ள சக்கராபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரகாஷ்(33) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 10 மற்றும் 7 வயதில் 2 குழந்தைகள் உள்ளன.

மது குடிக்கும் பழக்கம் உடைய பிரகாஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து ராஜசுலோசனாவை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் அவர் கணவரை கோபித்துக்கொண்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திண்டிவனத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பிரகாஷ் அவரப்பாக்கம் கிராமத்துக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் ராஜசுலோசனாவை திட்டி தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்