இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-10-15 18:06 GMT

தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது. எதிர்கால இந்தியா இளைஞர் கையில், என் நாடு என் மக்கள், வாய்ப்பை தேடாதே உருவாக்கு, கனவு காணுங்கள் என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில்குமார், காளீஸ்வரி, முருகன், மாறன், வெள்ளையன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்