தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தஞ்சையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை மல்லிகா நகரை சேர்ந்தவர் கதிரேசன் (வயது33). இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கும் வந்த போலீசார் கதிரேசனின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்துமருத்துவக்கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.