சாராயம் கடத்திய வாலிபர் கைது
நாகூரில் சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகூர்:
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் நாகூர் -கங்களாஞ்சேரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கீழ்வேளூர் பாமனியை சேர்ந்த வீரக்குமார் மகன் நவீன் (வயது 19) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபபதிவு செய்து நவீனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.