ஒலக்கூர்:
தமிழகத்தில் இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களை பற்றி அறிந்து கொள்ளவும், திறன் மேம்பாடு குறித்த விழப்புணர்வு மற்றும் தகவல்களை பெறவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றான தீன் தயால் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் "இளைஞர் திறன் திருவிழா" ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் 70 பேருக்கு பயிற்சி சேர்க்கை சான்றிதழை மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் கவுதமன், ஸ்ரீலதா, ஒலக்கூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவியும், தனிநபர் கடனும் வழங்கப்பட்டது.