மதுரையில் வாலிபர் வெட்டிக்கொலை
மதுரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மது போதையில் நண்பர்கள் தீர்த்து கட்டினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதூர்,
மதுரையில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மது போதையில் நண்பர்கள் தீர்த்து கட்டினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் வெட்டிக்கொலை
மதுரை உத்தங்குடி மெயின்ரோடு அருகே தட்டான்குளம் பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து கொலையாளிகள் கைரேகை பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் மேற்பார்வையில் புதூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளி
இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ெகாலை செய்யப்பட்டவர் ஒத்தக்கடை அருகே உள்ள மாயாண்டிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தவசி (வயது 22) என்பது தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவர் நண்பர்களுடன் சுற்றி திரிந்ததாகவும், அப்பகுதியில் மது அருந்திய போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். சம்பவத்தன்று அவருடன் சுற்றித்திரிந்த நபர்கள் யார், யார்? என போலீசார் விவரம் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.