மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் இறந்தார்.

Update: 2022-05-29 16:40 GMT

சுரண்டை:

சுரண்டை அருகே கீழக்கலங்கல் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி மகன் பாரத் (வயது 30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ந் தேதி தனது உறவினரான சுப்பையாபுரத்தை சேர்ந்த பிரசாந்த் (27) என்பவருடன் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சேர்ந்தமரத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். தன்னூத்து விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் காயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து பாரத் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்