மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
ராமநாதபுரம் அருகே தேங்காய் பறிக்கும் போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.
ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூர் கிழக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் காளிதாஸ் (வயது 35). தனியார் செல்போன் நிறுவனத்தின் கேபிள் பதிக்கும் பணியை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி காளீஸ்வரி என்ற மனைவியும் வர்ஷித் (3) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று பிற்பகலில் காளிதாஸ் வீட்டின் அருகில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்கம்பி மீது உரசி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.