தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
ஒட்டன்சத்திரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஒட்டன்சத்திரம் நகரில் கடந்த சில வாரங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் தனிப்படையினர் நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரே நபர் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், தஞ்சாவூரை சேர்ந்த முத்துராஜ் (வயது 33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. முத்துராஜ் மீது 50-க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.