தண்ணீர் தொட்டியில் விழுந்த வாலிபர் சாவு
தண்ணீர் தொட்டியில் விழுந்த வாலிபர் சாவு
ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகன் கிருஷ்ணன் (வயது 25). இவர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.