குடகனாற்றில் மூழ்கி வாலிபர் பலி

குடகனாற்றில் மூழ்கி வாலிபர் பலியானார்.

Update: 2022-09-15 19:00 GMT

திண்டுக்கல் நாகல்நகர் குயவர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மகன் தினேஷ் (வயது 17). இவர், என்.பஞ்சம்பட்டியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக அவரது பெற்றோரிடம் கூறி விட்டு வீட்டை விட்டு அவர் வெளியே சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாறு ஆற்றின் வாய்க்காலில் தினேஷ் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடகனாறு ஆற்றில் குளிக்க சென்ற போது நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்