பாம்பு கடித்து வாலிபர் சாவு
விராலிமலை அருகே பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விராலிமலை:
விராலிமலை தாலுகா தேராவூர் அன்னாசமுத்திரத்தை சேர்ந்தவர் சடையன். இவரது மகன் அயினான் (வயது 35). சம்பவத்தன்று அயினான் வீட்டில் படுத்திருந்த போது பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அயினான் பரிதாபமாக நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.