மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
மூலைக்கரைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள உன்னங்குளத்தை அடுத்த ஸ்ரீரெங்கராஜபுரம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் நம்பிராஜன். இவருடைய மனைவி செல்லத்தாய் (வயது 50). இவர்களது ஒரே மகன் தங்கமகேஷ் (வயது 17). கடந்த 28-ந் தேதி தங்கமகேஷ் தனது நண்பர் ராஜ் உடன் மோட்டார் சைக்கிளில் மூலைக்கரைப்பட்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் கல்லத்தி பாலம் பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் தங்கமகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.