ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

திருவிடைமருதூர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிாிழந்தார்.

Update: 2022-12-19 19:53 GMT

திருவிடைமருதூர்;

திருவிடைமருதூர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிாிழந்தார்.

குளிக்க சென்றார்

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மேல சாலை பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(வயது36). இவர் நேற்று முன்தினம் மாலை ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து திருவிடைமருதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் ரமேஷ் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் திருவிடைமருதூர் தீயணைப்புத்துறையினர் நேற்று காலை ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர் .

போலீசார் விசாரணை

இந்தநிலையில் நீண்ட நேர தேடுதலுக்கு பின் ஆற்றில் மூழ்கி இருந்த ரமேசின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்துதிருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்