வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்

கொடிக்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-09 21:47 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள எஸ். புதூர் மேல வீதியை சேர்ந்தவர் முகமதுயூசுப். இவருடைய மகன் முகமதுஅமீர்கான் (வயது25). கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி நாட்டில் இருந்து ஊர் திரும்பிய இவருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஆடுதுறையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு முகமதுஅமீர்கான் தனது நண்பர் சையது அகமதுவுடன்(21) மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார். மருத்துவக்குடி மெயின் ரோட்டில் வந்த போது திடீரென மனோகர் என்பவர் சாலையை கடந்ததால் மோட்டார் சைக்கிளை திருப்பிய போது அருகில் இருந்த கொடிக்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த முகமதுஅமீர்கான் சம்பவ இடத்திலேயே இறந்தார். மனோகர், சையதுஅகமது ஆகிய இருவரும் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்