தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள கண்டிலான் கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் பவனேஷ் கண்ணன்(வயது 19). இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார்.. இந்நிலையில் இவரது பெற்றோர் பவனேஷ் கண்ணனை திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் கோபித்துக் கொண்டு பவனேஷ் கண்ணன் விளங்குளத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் இருந்து வந்துள்ளார். அங்கு பவனேஷ் கண்ணன் நண்பர்களுடன் மது குடித்துள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் மீண்டும் பவனேஷ் கண்ணனை கண்டிலான் கிராமத்திற்கு அழைத்து வந்து கண்டித்தனர். இதில் மனம் உடைந்த பவனேஷ் கண்ணன் விளங்குளத்தூர் வீட்டில் உள்ள மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்..
இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.