தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ராமநாதபுரம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-18 18:45 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோவில் தெரு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் என்பவரின் மகன் சித்திரைசெல்வம் (வயது 30). சரக்கு வாகனம் ஓட்டி வந்தார். இவரது மனைவி சங்கீதா (25) சித்திரைசெல்வம் அடிக்கடி குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சித்திரை செல்வம் மது குடித்துவிட்டு வந்ததால் மனைவி சங்கீதா கண்டித்து விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டாராம். மனம் உடைந்த சித்திரை செல்வம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்