தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-06 19:11 GMT

சிவகாசி, 

சிவகாசியில் உள்ள சாரதாநகரில் வசித்து வருபவர் செந்தில்குமார் மனைவி ஜான்சிராணி.. இவரது கணவர் செந்தில்குமார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜான்சிராணியைவிட்டு பிரிந்து சென்று விட்டார். இதனை தொடர்ந்து ஜான்சிராணி தனது மகன்கள் ஜெகன்நாதன் (வயது 20), சதீஷ்குமார் (18) ஆகியோருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் ஜெகன்நாதன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வீட்டில் உள்ளவர்கள் சிறிது காலம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் காதலியுடன் பேசுவதை குறைத்துக்கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெகநாதன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்சிராணி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்