தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
லத்தேரி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்்.
கே.வி.குப்பம்
லத்தேரியை அடுத்த வடவிரிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சிவகுமார் (வயது 29), கூலித் தொழிலாளி.
இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட சிவகுமார் இன்று வீட்டின் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையில் தூக்குப்ேபாட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.
இதுகுறித்து லத்தேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம்.குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.