அருமனை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை காதல் விவகாரம் காரணமா? போலீஸ் விசாரணை

அருமனை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-07 20:55 GMT

அருமனை:

அருமனை அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வாலிபர்

அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மனைவி அனிதா. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கனகராஜ் இறந்து விட்டார்.

இதனால் அனிதா தன்னுடைய மகன்களான அல்ஜின் ஷால் (வயது 22), ஆன்றோ ஷால் ஆகியோரை கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இதில் அல்ஜின் ஷால் மருத்துவத்துறையில் ரேடியாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்தார். தற்போது சரியான வேலை கிடைக்காததால் அவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே அல்ஜின் ஷால் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அல்ஜின் ஷால் தூங்கிய அறை திறக்கப்படவில்லை.

தற்கொலை

இதனால் அனிதா கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே சத்தம் போட்டு மகனை அழைத்தார். அங்கிருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை.

பதற்றம் அடைந்த அனிதா, அக்கம் பக்கத்தினரை வரவழைத்து கதவை உடைத்தபடி உள்ளே சென்று பார்த்தார். அங்கு அல்ஜின் ஷால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அனிதா அதிர்ச்சி அடைந்தார். மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அல்ஜின் ஷால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்