தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Update: 2023-08-31 18:45 GMT

சிவகாசி

திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பெரியார் காலனியை சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் முரளிதரன்(வயது 39). இவர் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முரளிதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முரளிதரன் தந்தை சுப்புராஜ் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத் தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்