தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-29 19:08 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள கீழபெத்துலுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னவீரன் மகன் மகாலிங்கம் (வயது 21). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் குடிபழக்கத்துக்கு அடிமையான நிலையில் கடந்த 1 மாதமாக மகாலிங்கம் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை வீட்டில் உள்ளவர்கள் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மகாலிங்கம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சின்னவீரன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்