தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-24 18:54 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள மாரனேரி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் கருப்பசாமி (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் முனியம்மாள் தனது கணவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கருப்பசாமி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருப்பசாமியின் அண்ணன் அய்யப்பன் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்