தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்தார்.

Update: 2023-07-17 20:01 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள மாரனேரி சிங்கம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் மாரிமுத்து (வயது 31). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நிரோஜா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. மாரிமுத்து பால் கறக்கும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான மாரிமுத்து கிடைக்கும் சம்பள பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் குடித்து செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில் நிரோஜா அதே பகுதியில் வசித்து வரும் தனது மாமியார் குருவம்மாள் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து குருவம்மாள் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்