ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை
ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீரங்கத்தை சோ்ந்தவர் ரம்யா(32). இவரது கணவர் ஜெயசீலன்(34) டிரைவராக பணிபுரிந்து வந்தார். மதுபழக்கத்துக்கு அடிமையான இவரை ரம்யா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது அண்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.