அணையில் குதித்து வாலிபர் தற்கொலை

ஊட்டி அருகே அணையில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-17 18:45 GMT

மஞ்சூர்

ஊட்டி அருகே அணையில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த இத்தலார் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூணன். இவருடைய மனைவி சரஸ்வதி. ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். இவர்களது மகன் அபிமன்யு (வயது 28). இவர் கடந்த 3 மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூணன் இறந்து விட்டதால், சரஸ்வதி தனது மகன் அபிமன்யுவை பராமரித்து வந்தார். மேலும் மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க, ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வந்தார்.

அணையில் குதித்தார்

இந்தநிலையில் நேற்று காலையில் அபிமன்யு திடீரென அங்குள்ள போர்த்திஹாடா அணைக்கு சென்றார். பின்னர் அணையில் குதித்தார். இதை தூரத்தில் இருந்து பார்த்த சிலர், அதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் வீரர்கள் அணைக்கு வந்து, அபிமன்யுவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பிணமாக மீட்பு

மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து இருந்ததால், அவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. எனினும் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அபிமன்யு பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து எமரால்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்